--- --:--:-- --

ஆம்புலன்ஸ் வர தாமதமானதல் ஆண்களே பிரசவம் பார்த்த சம்பவம்!

4.1

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி ஒருவருக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி துளசிலே அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வியாழக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

 

உடனே அவருடன் கூலி வேலை செய்பவர்கள் அந்த பெண்ணை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதேநேரத்தில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புத்தக எழுத்தாளர் சந்திரன் தனது ஆட்டோவில் கர்ப்பிணியை ஏற்றி மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோது பிரசவம் ஏற்பட தொடங்கியுள்ளது.

 

இதனால் வேறு வழியின்றி சாலையின் புறத்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் தாயும், சேயும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணிக்கு தாயாக மாறி ஆண்களும் பிரசவம் பார்த்த சம்பவம் மனிதம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த கூலி 229 ரூபாயிலிருந்து 256 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் ஏரிகள் ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இந்த திட்டத்தில்வேலை செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 229 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாள் வேலை பகுதி திட்டத்தின் தினக்கூலி 229 ரூபாயிலிருந்து 256 ஆக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon