--- --:--:-- --

“மக்கள் உயிரே முக்கியம்!!” எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம்..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதில்!!

0e4a2c50-68ab-49d6-bae7-cf9b1437f70e

கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க கொரோனா விவகாரம் ஒன்றும் அரசியல் விவகாரம் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

 

இன்று சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

 

சேலம் மாவட்ட நிர்வாகம் கொரோணா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 150 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின் ஊரடங்கை தளர்த்தி எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது என்பது குறித்து முடிவு செய்ய உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் குணமடைந்து வருகின்றனர். தற்போதைக்கு விரைவாக கொரோனா பரிசோதனை நடத்த 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. இவை தமிழக ஆர்டர் ஆர்டர் செய்யப்பட்டவை ஆகும். மத்திய அரசும் 12 ஆயிரம் கருவிகளை வழங்க உள்ளது. மேலும் 50 ஆயிரம் கருவிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

 

மு க ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சொல்லும் நேரம் இதுவல்ல; இது உயிர் காக்கும் நேரம். மருத்துவ வல்லுனர்கள் அறிவுரைகளின் படியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்க இது ஒன்றும் அரசியல் பிரச்சினை அல்ல. மருத்துவ வல்லுனர்கள் அறிவுரைப்படி செயல்பட்டால்தான் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

 

தற்போதைய சூழலில் மக்கள் உயிரே முக்கியம். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon