--- --:--:-- --

கரடிக் குட்டிகளைக் காப்பாற்ற 2,000கி.மீ. சாகச பயணம் செய்த நபர்!

7

ரஷ்யாவில் தாயால் கைவிடப்பட்ட பழுப்பு கரடி குட்டிகள் காப்பாற்ற பட்டுள்ளன. குவர் இடத்திலிருந்து குரோவ் இடத்திற்கு செல்லும் வழியில் கடந்த 3 நாட்களாக மூன்று குட்டிகள் பசியால் கத்திக் கொண்டிருந்தன. இதனை கண்ட ஓட்டுனர் ஒருவர் அதனை மீட்டு வன உயிரின காப்பகத்தில் ஒப்படைக்க முயன்றனர்.

 

ஆனால் அருகில் காப்பகம் எதுவும் இல்லாததால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து வனவிலங்கு காப்பகத்தில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து இரு ஆண் குட்டிகளுக்கு லயோகா, மிர்ணி என்றும், ஒரு பெண் குட்டிக்கு லாலா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூன்று மாதம் ஆன அந்த குட்டிகள் தற்போது நலமுடன் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon