--- --:--:-- --

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா தொற்று..! இருதய சிகிச்சைப் பிரிவு அவசரமாக மூடப்பட்டது!!

download

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மனையில் இருதய நோய் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டு அங்கிருந்த நோயாளிகள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

உலகை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது .உலகம் முழுவதும் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிப்புக்கு ஆளானதுடன், பலர் உயிரிழந்த சோகமும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோன் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா நோயாளிகளுக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இங்கு தான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு நோயாளிகள் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த டாக்டர் பணி புரிந்த இருதய நோய் சிகிச்சைப் பிரிவு முழுவதும் உடனடியாக மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon