--- --:--:-- --

ம.பி.,யில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கொரோனா..! டாக்டர்கள் உள்பட 89 சுகாதார பணியாளர்களுக்கும் பாதிப்பு!!

IMG-20200416-WA0270

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில், உயிரைப் பணயம் வைத்து முன்னணியில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மட்டுமின்றி ஆட்சியாளர்களும் தான்.

 

இதனால் கொரோனா தொற்று இவர்களையும் எளிதில் தொற்றி விடுகிறது. உலகம் முழுவதும் இப்படி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பலர் உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து வருகிறது.

 

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும், மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதில், ம.பி., மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் என 89 பேரும், காவல் துறையில் 40 பேர் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் ஆளான மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அதற்கு அடுத்த படியாக டெல்லி, தமிழகம் திகழ்ந்தாலும், ம.பி.,யில் 1090 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் உயிரிழப்பு 55 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon