--- --:--:-- --
13

இத்தாலி கொரொனா வைரஸ் தாக்கத்தால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்ததால் இப்போது அதனை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டுள்ளது. எப்படி இது சாத்தியமானது. மார்ச் மாதம்வரை உலகிலேயே அதிகளவு கொரொனா உயிரிழப்புகளை கொண்டிருந்தது இத்தாலி.

 

கொரொனாவின் மையப்பகுதி என்னும் அளவிற்கு அங்கு உயிரிழப்புகளும், பாதிப்புகளும் இருந்தன. இப்போது இத்தாலி மீட்சி பாதைக்கு திரும்பி கொண்டுள்ளது. ரத்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுவதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயினும் இந்த சிகிச்சை முறை இன்னும் சோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

 

பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனைக் அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்று குணமடைந்தவர்களிடமிருந்து பிளாஸ்மாகளை கொடையாக பெற்று வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் கொரொனாவுக்கான பிளாஸ்மா சிகிச்சை மாதிரி அதாவது புரோடோடைப் நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon