குப்பையில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழம்! உண்ணும் வெளிமாநில தொழிலாளர்கள்!
டெல்லியில் யமுனை நதி அருகே குப்பையில் வீசப்பட்ட வாழைப்பழங்களில் இருந்து நல்ல பழங்களை எடுத்து சாப்பிடும் நிலைக்கு வெளிமாநில தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் யமுனை நதி அருகே உள்ள இடத்தில் குப்பையில் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களில் இருந்து சிலவற்றை பொறுக்கி எடுத்து தொழிலாளர்கள் சாப்பிடுகின்றனர்.

இந்த அவலநிலையை தொடர்பான வீடியோ புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்துவிட்டது ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சீனா ஷாப்பிங் செய்ய அனுமதி மறுத்து அவர்களை வெளியே துரத்தும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.







