--- --:--:-- --

இரவு பகலாக பணியாற்றிய 26 வயது இளம் மருத்துவர் திடீர் மரணம்!

1

தெங்குமரஹாடா கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கி மருத்துவ சேவை செய்த இளம் வயது மருத்துவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் அடர்ந்த மலை பகுதிகளுக்கு மத்தியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது.

 

அந்த கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசல் மூலமாய் ஆற்றைத் தாண்டி கிராமத்துக்குள் செல்கின்றனர். சுமார் ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ளதால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எந்த மருத்துவரும் வரவில்லை. இந்நிலையில் சிறுமுகையை சேர்ந்த ஜெயமோகன் என்ற 26 வயது மருத்துவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு தங்கி மருத்துவம் பார்த்து வந்தார்.

 

மக்களுடன் அன்பாக பழகிய மருத்துவர் ஜெயமோகன் பகலிரவு பாராமல் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் மருத்துவர் ஜெயமோகன் உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon