மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது!
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது. கொரொனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை நிறுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற உள்ள.து இதனால் பாதிக்கப்படும் ஏழை எளிய மற்றும் தொழிலாளர்களின் இன்னல்களை போக்க புதிய சலுகைகளை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்பட தேவையில்லை என்றும் உணவுப்பொருட்கள் போதுமான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படலாம் என்றும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணக்கார மக்கள் முன்வந்து தங்கள் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.







