ஊரடங்கு காலத்தில் இதையெல்லாம் கடைப்பிடியுங்கள் மக்களே..! பிரதமர் மோடியின் 7 வேண்டுகோள்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். அப்போது ஊரடங்கு காலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய 7 அம்சங்களை வேண்டுகோளாக முன் வைத்தார். அவற்றின் விவரம் வருமாறு:
1.வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பாகவும் இருக்க வைப்பது அவசியம்.
2. மே 3-ந்தேதி இம்ம பாது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம். முகக் கவசம் கட்டாயம் அணியுங்கள்.
3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.
4. கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
5. ஏழை எளிய மக்களுக்கு உதவுங்கள்.
6.மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினரின் சேவைகளை மதியுங்கள்.
7.யாரையும் பணியிலிருந்து நீக்க வேண்டாம். இரக்கம் காட்டுங்கள்.
என பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு தொடர்பாக முக்கிய வேண்டுகோள்களை தனது உரையின் போது மக்கள் முன் வைத்தார்.







