--- --:--:-- --

“அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!” தமிழில் “டூவீட்’ செய்த பிரதமர் மோடி!!

“அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!” தமிழில் “டூவீட்’ செய்த பிரதமர் மோடி!!

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், என் தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் பதிவிட்டுள்ளார்.

 

சித்திரை 1-ம் நாள் தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும், கேரளாவில் விஷூ திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடக்கம் என்ற நிலையில் வழக்கமாக பெரும் உற்சாகமாக இல்லையென்றாலும், சம்பிரதாயத்தை கைவிடாமல் எளிமையாக கொண்டாடி வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் என தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திட பிரார்த்திக்கின்றேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது போல் விஷூ திருநாள் கொண்டாடும் கேரள மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Right Menu Icon