மே 3ம் தேதி வரை இத்தாலியில் முழு ஊரடங்கு உத்தரவு
கொரொனா வைரஸ் தொற்று நோயை தடுக்க மே 3ஆம் தேதி வரை இத்தாலியில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் உயிரிழப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது. அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
இத்தாலி நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் வைரஸ் நோயை தடுக்க மே 3ஆம் தேதி வரை இத்தாலியில் ஊரடங்கு என்று பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் தற்போது அவசர நிலை என்பது குறித்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்ட பின்புதான் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.







