நாகாலாந்தில் முதலாவது கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் முதலாவது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை நாகலாந்து மற்றும் மேகலாயாவில் தொற்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபருக்கு கொரொனா அறிகுறிகள் காணப்பட்டன.
நாகலாந்தில் கொரொனா ஆய்வக வசதி இல்லாததால் தோகாத்தி மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. பின்னர் அவர் தோகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நாகலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.







