தனது 75 வாடகை வீட்டுக்கு வாடகை வேண்டாம் எனக்கூறிய உரிமையாளர்!
கொரொனா காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்கள் வாடகை பணத்தை விட்டுக் கொடுத்துள்ளார். கொரொனா நகரில் வசிக்கும் புதூரில் பாலலிங்கம் என்பவருக்கு சொந்தமாக மூன்று குடியிருப்புகள் உள்ளன.
இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றாட கூலி வேலை பார்த்து வரும் இவர்கள் வீட்டில் முடக்கியுள்ளனர். இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் 75 வீடுகளின் வாடகை பணத்தை வாங்காமல் விட்டு கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் அவருக்கு கிடைக்கும் வருவாய் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டடால் அடுத்த மாதம் வாடகை வசூலிக்க போவதில்லை என பாலலிங்கம் கூறியுள்ளார்.






