--- --:--:-- --

குறைபாடு உடைய மகனுக்கு ஒட்டகப்பால் வேண்டும் என கெஞ்சிய தாய்!20லி பாலை கொண்டு சேர்த்த ரயில்வே!

2

பிரதமர் மோடிக்கு அனுப்பிய ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் மும்பையை சேர்ந்த பெண்ணின் மகனுக்கு 20 லிட்டர் ஒட்டகப்பால் கிடைத்துள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணின் மூன்றரை வயது மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவன். அந்த குழந்தைக்கு ஆடு, மாடு போன்றவற்றின் பால் ஒவ்வாமை கொண்டது என்பதால் ஒட்டகப்பால் அளித்து வந்துள்ளனர்.

 

ஊரடங்கால் குழந்தைக்கு ஒட்டகப் பால் கிடைக்காத நிலையில் அந்த பெண் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு தனது பிரச்சினையை கூறி பதிவுசெய்தார். ராஜஸ்தான் ஒட்டக பால், ஒட்டகப்பால் பவுடரோ கிடைக்க உதவுமாறு அவற்றில் கேட்டிருந்தார்.

 

இந்த ட்விட்டரை கண்ட ஐபிஎஸ் அதிகாரி அருண் கோத்ரா ராஜஸ்தானில் உள்ள ஒட்டகப்பால் நிறுவனம் ஒன்றில் தொடர்பு கொண்டார். அவர்கள் தருவதற்கு தயாராக இருந்தும் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு எப்படி பாலை அனுப்புவது என்று சிக்கல் நிலவியது. அருண் கோத்ராவின் ட்விட்டரை வரை கண்ட வடக்கு ரயில்வே ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு ஒட்டகப் பாலை அனுப்ப முன்வந்தது.

 

இதையடுத்து நிறுத்தம் இல்லாவிட்டாலும் ராஜஸ்தானிலிருந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் மூலம் ஒட்டகப்பால் அனுப்பப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon