கொரோனா வைரசின் முள் போன்ற பகுதியை தடுக்க தடுப்பூசி..!
கொரொனா தடுப்பூசி சோதனைக்கான நபரை தேர்வு செய்துள்ளதாகவும் மே மாதம் சோதனை துவக்கப்படும் எனவும் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான நோவா அறிவித்துள்ளது. மேரிலேண்ட் இல் இதை தெரிவித்த நோவமூக்ஸ் தலைமை விஞ்ஞானி டாக்டர் கிரிகோரி விலங்குகளிடம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது கூறினார்.
கொரொனா வைரஸின் மேற்பகுதியில் காணப்படும் முள் போன்ற அமைப்புகள் மனித உடலுக்குள் ஊடுருவி முள் போன்று கெட்டியாக பற்றி பிடித்துக் கொள்கிறது என தெரிவித்தார். இதை தடுக்க அந்த முள் போன்ற பகுதிகளின் பிடிமானத்தை பலவீனப் படுத்தக் கூடிய ஆன்ட்டி பாடீஸ் தாங்கள் பரிசோதிக்க உள்ள தடுப்பூசியில் உள்ளது என்றார்.
தடுப்பூசி சோதனைகள் முடிய இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்த டாக்டர் கிரிகோரி வைரஸ் வேறு வடிவெடுத்து இரண்டாம்கட்ட பரவலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.







