நல்ல சமாரியன் கிளப் சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்
நெல்லை அருகே வள்ளியூர் நல்ல சமாரியன் கிளப் சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கொரொனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் காலனியில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குடும்பங்களுக்கு நல்ல சமாரியன் கிளப் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. 5 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி கொரொனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் திருப்பதி நல்ல சமாரியன் கிளப் வள்ளியூர் கிளை தளபதி செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.







