மாவட்ட ஆட்சியர்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை…!
தமிழகத்தில் அதிக அளவில் கொரொனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஒரு லட்சம் ரப்பிட்ஸ் கருவிகளை வாங்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் பரிசோதனைக்கு ஏற்கனவே 17 ஆய்வகங்கள் உள்ள நிலையில், மேலும் 21 ஆய்வகங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக தெரிவித்தார்.
கொரொனா பரிசோதனைகளை விரிவுபடுத்த துரித ஆய்வு உபகரணங்கள் மற்றும் சிகிச்சைக்காக கூடுதலாக வென்டிலேட்டர்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




