--- --:--:-- --

வருமானமின்றி தவித்த சலூன் கடைக்காரர்களுக்கு சமூக சேவகர் இந்திராசுந்தரம் ரூ 6 ஆயிரம் மதிப்பிலான அரிசி மளிகை பொருட்கள் உதவி

1

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தெய்வா சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் தெய்வராஜ். சமூக சேவகரான இவருடன் இவரது தாயார், மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இவர்களுடன் 2 வளர்ப்பு குழந்தைகள் மற்றும் இவரது 2 சகோதர்கள் குடும்பத்தில் 8 பேர்கள் என மொத்தம் 16 பேர்கள் ஆத்துப்பாளையத்தில் அருகருகில் வசித்து வருகிறார்கள்.

 

இவரது சகோதரர்களும் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 13 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகளை இவர்களால் திறக்க முடியவில்லை. வருமானம் இல்லாததால் அவர் கையில் சேமித்து வைத்து இருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் தற்போது சாப்பிட வழியின்றி தவித்து வருகிறார்கள்.

இதனையறிந்த சமூக சேவகர் இந்திராசுந்தரம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று தெய்வராஜ் மற்றும் அவரது 2 சகோதரர் களுக்கும் தனித்தனியாக தலா ரூ 2 ஆயிரம் என மதிப்பில் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதேபோல் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் ஹரிணி என்ற மாணவி யின் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார்.

 

இதைத்தொடர்ந்து ஹரிணியின் குடும்பத்திற்கு தேவையான ரூ 2 ஆயிரம் மதிப்பிலான அரசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். மேலும் ஹரிணியின் நெருங்கிய வகுப்பு தோழி எஸ். அனிஷ் ஃபாத்திமா தனது சேமிப்பு கணக்கில் இருந்து தனது தோழியின் குடும்பத்திற்கு ரொக்கமாக ரூ 5 ஆயிரம் வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon