90ஸ்களின் சக்திமான் மீண்டும் ஒளிபரப்பு!
1990களின் இறுதியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான சக்திமான் மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது. கொரொனா பரவலை எடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொலைக்காட்சி தொடர்களை அதிகம் பார்த்து வருகின்றனர்.
ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட தொடர்களை தொடர்ந்து உபனேஷகங்கா, சானக்கியா, கிருஷ்ணா காலி, சர்க்கஸ் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்த சக்திமான் தொடர்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன் முடிவுசெய்துள்ளது. இதில் சக்திமான் தொடர் வரும் ஒன்றாம் தேதி முதல் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகிறது.






