ஏப்ரலில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்னாச்சு!
தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தபடவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரொனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது திட்டம் சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.







