முடிவு நெருங்கிவிட்டது…விஞ்ஞானி அளித்த தகவல்!
கொரொனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கிவிட்டது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் கணித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தோன்றிய கொரொனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
இந்நிலையில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உயிரியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கொரொனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் சமூக விலகல் என்பது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் எண்பதாயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் 3 ஆயிரத்து 250 உயிர் இழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் ஏற்கனவே மதிப்பிட்டு இருந்தார். அதுபோலவே சீனாவில் 3 ஆயிரத்து 277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் அவர் கணித்துக் கூறியபடி சீனாவில் கொரொனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உகான் மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் மைக்கேல் கருத்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






