--- --:--:-- --

கோவையில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் “மோடி கிச்சன்” திட்டம்..! வீடியோ கான்பரன்ஸ் மூலம் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்!!

a62a9633-89e7-4bbe-932e-2d2e973d3019

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டோரில், 500 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் “மோடி கிச்சன் ” திட்டத்தை பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார்.

 

கோவை காந்திபுரம் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் வகையில் “மோடி கிச்சன்” திட்டம் துவங்கப்பட்டது. 6-வது வீதியில் இதற்காக பிரத்யேக சமையல் அறை துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் இன்று காலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவங்கி வைத்தார்.

 

வீடியோ கான்பரன்ஸில் பேசிய அவர், முடிந்த அளவு மளிகை பொருட்களை , உணவு பொருட்களை இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வானதி்சீனிவாசன் வலியுறுத்தினார். மேலும்,உணவு இல்லாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon