வெளியே வருவோரிடம் திருக்குறள் ஒப்பிக்க சொன்ன போலீசார்..தமிழ்த்தாய் தெரியாமல் முழித்த மாணவன்!
நெல்லையில் போலீசாரிடம் பிடிபட்டவர்களிடம் திருக்குறளை சொன்னவர்கள் மட்டும் அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்றவர்களுக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர்.ஒரு சில இடங்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
அதன்படி நெல்லையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் வாகனங்களில் வருவோருக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிடிபட்டவரிடம் திருக்குறள் சொல்லுமாறு தெரிவித்த போலீசார் திருக்குறளை சொன்னவர்களை மட்டுமே அந்த வழியாக செல்ல அனுமதித்தனர்.
மற்றவர்களை வந்த வழியிலேயே திருப்பி அனுப்பினர். அப்போது பள்ளி மாணவர் ஒருவர் தமிழ்தாய் வாழ்த்து சொல்ல தெரியாமல் சிக்கிக்கொண்டார்.







