--- --:--:-- --

சமூக விலகலை கடைபிடித்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

2

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமூகவிலகலை குறிப்பிடும் வகையில் அமைச்சர்கள் தனித்தனியே அமர்ந்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக விலைகளை வலியுறுத்தி இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

 

இந்த நிலையில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமூக விளைவுகளை வலியுறுத்தும் வகையில் அனைத்து அமைச்சர்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தனித்தனியே அமர்ந்திருந்தனர்.

 

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிப்பதாகவும் இதனால் மத்திய அரசு அவர்களுக்கு உதவும் வகையில் பண பரிமாற்ற திட்டத்தை உருவாக்கி 5 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon