கொரோனா பரிசோதனை இல்லாமல் தமிழக எல்லைக்குள் வரும் கேரள வாகனங்கள்
தமிழக-கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் 5 சோதனைச் சாவடிகளில் மருத்துவர்களின் பரிசோதனை இன்றி வாகனங்கள் கடந்து செல்வதால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ள நிலையில், அதற்கு அருகிலுள்ள கக்கண்டி, மணல் வயல், கோட்டூர்,மதுவந்தாள் போன்று சோதனைச் சாவடிகளில் பரிசோதனை நடத்த மருத்துவக் குழுக்கள் இல்லை.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.






