--- --:--:-- --

அத்தியாவசியம் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடல்

6

அத்தியாவசிய அலுவலக பணிகளுக்கான அரசு அலுவலகங்கள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் வங்கிகள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பத்திரிக்கைகள், ஊடக நிறுவனங்கள், அத்தியாவசிய பணிகள் பட்டியலில் வருவதால் அவை இயங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை.பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon