கொரொனாவால் ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பா?
ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாதது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த அதிகாரியான டிக் பவுண்ட் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் திட்டமிட்டு நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் மற்றும் சர்வதேச விளையாட்டு துறையினருடன் ஆலோசித்து நான்கு வாரங்களில் அறிவிக்க இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஜூலையில் போட்டிகளை நடத்தினால் பங்கேற்க முடியாது என பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபரில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவித்த அவர் 2021 வரை ஓராண்டு குறைக்கப்பட்டால் ஏற்பாடுகள் செய்ய கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்றார்.







