--- --:--:-- --

கொரோனா சமூக தொற்றாக மாறினால் வென்டிலேட்டர் அவசியம்!

4

கொரொனா மூன்றாம் கட்ட பரவலை அடைந்து சமூக தொற்றாக மாறினால் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளுக்கு அதிக தேவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கொரொனா பரவுவதால் பல நாடுகள் வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக மைசூரிலுள்ள ஸ்கேன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் வென்டிலேட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. ஆனால் அதற்கான உதிரிபாகங்களை சப்ளை செய்ய இப்போது உள்ள சூழலில் ஐரோப்பிய நாடுகள் முன்வராதது உற்பத்தியை பாதிக்கும் என்று அதன் உரிமையாளர் கூறுகின்றார்.

மைசூருவில் உள்ள தயாரிப்பு கூடத்தில் மாதந்தோறும் 200 வெண்டிலேட்டர் களைத் தயாரிக்கும் நிலை உள்ளதாகவும், டிஆர்டிஓ போன்ற அமைப்புகள் உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை வடிவமைத்து வழங்கினால் அதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு வெண்டிலேட்டர் விலை ஐந்து லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon