--- --:--:-- --

உலாவரும் சூப்பர் ஸ்பிரடர்ஸ்! கண்ணுக்கு தெரியாத கொரொனா மனிதன்!

8

மருத்துவ உலகின் கண்களுக்கு தெரியாத வகையில் நோய் தொற்றுகளை அதிக எண்ணிக்கையில் பரப்பும் நோயாளியை சூப்பர் ஸ்பிரடர்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது கொரொனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் சூப்பர் ஸ்பிரடர்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

மும்பை கல்யானில் கொரொனா தொற்றுடன் அமெரிக்காவிலிருந்து வந்த நபர் கொரொனா தொற்று தெரியாமலேயே சுமார் 1000 பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதில் ரயில் பயணம் மேற்கொண்டதுடன் திருமணம் ஒன்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த 46 வயது நபர் இத்தாலியிலிருந்து கொரொனா தொற்றுடன் திரும்பி வந்த பிறகு 813 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

 

மெட்ரோவில் பயணம் செய்த அவர் வேலை நிமித்தமாக பலருடன் கலந்து பழகியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தென்கொரியாவில் கொரொனா அறிகுறி எதுவும் காணப்படாமல் தொற்று பாதித்த பெண் தான் செல்லும் சர்ச்சில் 37 பேருக்கு அதனை பரவ செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

சூப்பர் ஸ்பிரடர்ஸ் என்பவர்களுக்கு நோய் அறிகுறி எதுவும் காணப்படாது என்பதால் அவர்கள் நோய் தடுப்பு காவலுக்கு செல்வதில்லை.

Leave a Reply

Right Menu Icon