சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தேவாலயம் சேதம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் சாக்கிரப் அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது. இதனால் பல கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சாக்கிரப்பில் உள்ள பழமையான தேவாலயம் ஒன்றும் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்தது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியது நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply