--- --:--:-- --

ஆட்டுச் சந்தையில் 4 மணி நேரத்தில் 2500 ஆடுகள் விற்பனை..!

9

கொரொனா அச்சுறுத்தலால் கோழி விற்பனை சரிந்து இருக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் மேட்டூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் சுமார் நான்கு மணி நேரத்தில் 2,500 ஆடுகள் விற்கப்பட்டு இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.

 

மேலும் ஆடுகளுக்கான சந்தை மதிப்பு 1,000 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ஆம் தேதி வரை வாரச்சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கும் நிலையில் வாரந்தோரும் வெள்ளியன்று நடைபெறும் மாட்டுச்சந்தை வழக்கம்போல நடைபெற்றது.

Leave a Reply

Right Menu Icon