கொரொனா மார்ச் மாதம் அதிகம் பரவுமா?
கொரொனா வைரஸ் அடுத்த மாதம் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறதா? மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் அதிர்ச்சி தகவலை சொல்லியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிறநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அழைத்து வரப்பட்ட பிறகு இந்தியாவில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
கொரொனா தடுப்பு நடவடிக்கையால் மகாராஷ்டிரா எல்லைகள் மூடப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசும் அதை தான் செய்ய விரும்புகிறது என கூறியுள்ளார். இந்த நிலவரத்தில் அரசின் ஆலோசனைகளை மக்கள் மீறினால் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிலைகள் மூடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







