--- --:--:-- --

துபாயில் இருந்து வந்த 143 பேர்! கொரோனா அறிகுறி இல்லை

3

துபாயில் இருந்து மதுரை வந்த 143 பேரில் யாருக்கும் கொரொனா அறிகுறி இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 143 பயணிகள் விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தின் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் அறிகுறி இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 143 பேரும் இன்று இரவுக்குள் வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர் என்றும், 28 நாட்களுக்கு அனைவரும் தங்களது வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒருமுறை பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்ட பின் 143 பேரும் வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர். கண்காணிப்பு மையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வெளி நபர்களோ, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்களோ கண்காணிப்பு மையத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon