--- --:--:-- --

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்,மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது !!!

6

கோவையில் கடந்த மார்ச் 04 ஆம் தேதி முன்பு இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் ( எ ) ஆனந்த நாராயணன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதனடிப்படையில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த நூர் முகமது என்பவரை கடந்த மார்ச் 11 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக இருந்த அசாருதீன் என்பவரையும் மார்ச் 13 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கோவை மாநகர கமிஷனர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.அதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

 

இதே போல் கோவை கணபதி வேதாம்பாள் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மசூதி மீது கடந்த மார்ச் 5 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது.இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பாண்டி ( எ ) சடையாண்டி,அகில் ஆகிய இருவரை கடந்த மார்ச் 10 ஆம் தேதி கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட பாண்டி ( எ ) சடையாண்டி,அகில் இருவர் மீதும் கோவை மாநகர கமிஷனர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.அதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

 

ஏற்கனவே கோவைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் மற்றும் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீது கோவை மாநகர காவல் ஆணையர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பொது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon