சூப்பர் மார்க்கெட்டில் ஊழியரின் செல்போனை திருடியவர் போலீசில் ஒப்படைப்பு!
அரக்கோணம் அருகே ஐஎன்எஸ் ராஜாளி விமானதள ஊழியர் மனைவியுடன் சென்று சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரக்கோணம் பழமுதிர்சோலை சூப்பர் மார்க்கெட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த ஊழியரின் செல்போனை மனைவியுடன் பொருட்கள் வாங்க வந்த யுவராஜ் என்பவர் திருடி சென்றார்.
கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவான நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் அருகில் உள்ள மற்றொரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தவரை பழமுதிர்சோலை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செல் போன் திருடியவர் ஐஎன்எஸ் ராஜாளி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




