--- --:--:-- --

தேனி வெடிவிபத்தில் தாய் மகள் உடல் கருகி பலி

5

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வெடி தயாரித்தபோது திடீரென வெடித்து சிதறியதால் தாய் மற்றும் மகள் உடல் கருகி பலியானார்கள். வடகறி சேர்ந்த கணவரை இழந்தவரான பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் நிவேதா ஆகியோர் திருவிழா மற்றும் விசேஷங்களுக்கு வெடி தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

 

இன்று வழக்கம் போல் வெளி தயாரித்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உயிருக்கு போராடிய நிவேதாவை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அந்த வீடும் அவர் பக்கத்தில் உள்ள வீடுகளும் இடிந்து சேதம் அடைந்தன. விசாரணையில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக வெடி தயாரித்து வந்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon