இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம்
ஜிஎஸ்டி போர்டளில் உள்ள குறைபாடுகளை சரி செய்வது தொடர்பான திட்டத்தை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் மென்பொருள் கட்டமைப்புகளை முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் கவனித்து வருகிறது.
அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் வரி தாக்கல் செய்யும் போது இன்னும் சில தொழில்நுட்ப கோளாறுகளை வரி செலுத்துவோர் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிக்கலை களைய வேண்டும் என வரி செலுத்துவோர் இடமிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
எனவே மார்ச் 14-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் முன்பு இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகேனி ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிதி அமைச்சகம் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி போர்ட்டலில் காணப்படும் குறைகள் களையப்படவில்லை என்றும் இதனால் முறையாக ஜிஎஸ்டி செலுத்தும் வாடிக்கையாளர்களும் விரக்தி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் 15 நாட்களுக்குள் ஜிஎஸ்டி போர்டில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




