கோவை இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு!!!
கோவை காட்டூர் ரங்கே கோனார் வீதியில் இந்து முன்னணியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் சிவா என்பவர், அலுவலகத்தை திறக்க வந்த போது உடைந்த பாட்டில் கிடப்பதை கண்டு இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல் துறையினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்,அங்கு அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்து முன்னணி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் மதுக்கரை ஆனந்த மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டுள்ளதும்அதனை தொடர்ந்து கணபதி வேதம் பால் நகரில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இச்சம்பவங்கள் தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




