--- --:--:-- --

பீர் பாட்டில் முனையில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்!

10

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 12 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி பெற்றோரை இழந்த நிலையில் உறவினர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

 

இவர் கடந்த வெள்ளியன்று இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் பின்புறம் சென்ற போது அப்பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்த மூவர் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து அவளை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இதுதொடர்பான புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் பார்த்திபன் மற்றும் சந்துரு ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon