திரௌபதி படத்தைப் போலவே அடுத்த படத்திற்கும் பெயர் வைக்க போகிறேன்!
திரௌபதி படத்தைப் போலவே தான் இயக்கும் அடுத்த படத்திற்கும் கடவுள் பெயரில் தலைப்பு வைக்கப்போவதாக இயக்குனர் மோகன் சி அறிவித்துள்ளார். இயக்குனர் மோகன் சி இயக்கத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து திரௌபதி என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் மோகன்ஜி திரௌபதி என கடவுளின் பெயரை வைத்தால் தான் இப்படத்தின் மீது வன்மம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தான் இயக்கும் அடுத்த படத்திற்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




