இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சுற்றுலாவுக்காக ஜெய்ப்பூர் சென்ற 16 இத்தாலிய சுற்றுலா பயணிகள் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் சோதனை நடத்த உத்தரவிட்ட நிலையில், நேற்றைய தினம் வரை ஐந்து லட்சத்து 89 ஆயிரம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அவர்களில் 15 ஆயிரம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஈரான் அரசு ஒத்துழைத்தால் அங்குள்ள இந்தியர்களுக்கு பரிசோதனை செய்ய ஆய்வகம் திறக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




