--- --:--:-- --

ஆசிரியர் அடித்ததால்…மாணவனின் ஒரு கண் பார்வை பறிபோனது!

4

சென்னை தாம்பரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் கண் பார்வை பறி போனதாக புகார் எழுந்துள்ளது. மேடவாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் கார்த்தி என்று அந்த மாணவனின் பின்னந்தலையில் கடந்த மாதம் நான்காம் தேதி அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் இரும்பு ஸ்கேலால் அடித்தார் என்று கூறப்படுகிறது.

 

மறுநாள் தலை வலிக்கிறது என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவனின் இடது கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் பார்வை பறிபோனது என பெற்றோர் குற்றம்சாட்டும் நிலையில் பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon