பாடகருக்கு நகைச்சுவையாக பதிலளித்த இவாங்கா

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா புகைப்படத்தோடு தமது படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவிட்ட இந்திய பாடகருக்கு நகைச்சுவையான பதில் கிடைத்துள்ளது. டிரம்புடன் இந்தியா வந்த இவாங்கா தாஜ்மஹாலை பார்வையிட்டபோது அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இந்திய பாடகர் டுவிட்டரில் வெளியிட்டார்.

அதைக்கண்டு இவாங்கா தம்மை தாஜ்மஹாலுக்கு அழைத்துச்சென்றவருக்கு நன்றி என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதேபோல் புகைப்படங்களை பதிவிட பலருக்கும் இவங்கா நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார்.


Leave a Reply