உணவகத்தில் சாப்பிடும் போது உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிடும்போது உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். மீஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு உட்கொள்ளும் போது உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி ஊழியர்களிடமும் உணவு நிர்வாகத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.





