--- --:--:-- --

உணவுக்கு வழியின்றி சொந்த குட்டியை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய கரடி!

2

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி.தான் ஈன்ற குட்டியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள ஐந்தறிவு ஜீவன்கள் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லும். ஆனால் சமீபத்தில் வெளியான போலார் கரடிகள் வீடியோ காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது. சொந்த குட்டியை ஈவு இரக்கமின்றி வேட்டையாடுகிறது ஒரு ஆண் கரடி.

 

ஆண் கரடியை தடுத்து நிறுத்த குட்டியின் தாய் கடுமையாக போராடினாலும் இறுதியில் தோல்வியே மிஞ்சுகிறது. காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் கடலில் பனிக்கட்டிகள் உருகி வருவது ஒரு பக்கம் இருக்க, இயற்கை எரிவாயு எடுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்டிக் கடலில் முகாமிட்டுள்ளனர்.

 

இதனால் போலார் கரடிகளுக்கு உணவு கிடைப்பது குதிரை கொம்பாக மாறிப்போனது. போலார் கரடிகள் கார்னிபஸ் வகையைச் சார்ந்தது. குட்டிகளை வேட்டையாடும் பண்புகளை கொண்ட மிருகங்கள் கார்னிபஸ் என்று அழைக்கப்படுகிறது, இந்தப் பண்பு போலார் கரடிகள் இடையே தற்போது அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் மூலம் தெரிவிக்கிறார் மோட் வின்சோ என்கிற ஆராய்ச்சியாளர்.

 

பசிக்கொடுமையால் உணவுக்கு வழியின்றி சொந்த குட்டிகளை ஈவு இரக்கமின்றி போலார் கரடிகள் வேட்டையாடுவதற்கு ஒருவகையில் மனிதர்களும் காரணம். காலநிலை மாற்றம் குறித்து கவலைப்படாத இந்த மனித சமூகம் காடுகளை அழித்து, மலைகளை குடைந்து தற்போது பனிப் பாறைகள் நிறைந்த ஆர்டிக்கையும் விட்டுவைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

 

பல இயற்கை வளங்கள் நிறைந்த இந்தப் பேரண்டம் வெறும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. வாயில்லா ஜீவன்களின் நலனுக்காக இந்த பூமியை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதை இந்த போலார் கரடிகள் உணர்த்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon