குடியரசு துணைத் தலைவர் வருகையால் மாணவர்கள் கருப்பு உடை அணிய தடை
குடியரசுத் துணைத் தலைவர் வருகை தர உள்ளதால் சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கருப்பு நிற உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று மாலை 2020 முதல் 2030 வரை இந்தியா என்ற தலைப்பில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுவதோடு மாணவர்களோடு கலந்துரையாடவுள்ளார்.
இதில் பங்கேற்பவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரி பேக்குகளை எடுத்து வரவும், வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து ஐஐடி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




