--- --:--:-- --

இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான பிரச்னை

6

இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையேயான பிரச்சனையை இரண்டு வாரங்களில் விசாரித்து முடித்துவைக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

45 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வரும் தன்னை வெளியேற்றும் முடிவை அந்நிறுவனம் கைவிட வேண்டும் என இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon