கடற்கரையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை கடத்தல்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைமேடையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்டு இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பூர்வீகமாகக் கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர் கணவரை பிரிந்து தனது 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்தார். அங்கு ஊசி மணி,மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களுடன் வசித்து வந்தார்.
வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம் போல தனது குழந்தையுடன் தூங்கிய சினேகா எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதால் அதிர்ந்து போனார். எங்கு தேடியும் கிடைக்காததால் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையை தொடங்கிய காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.





