--- --:--:-- --

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் என் பாணியில் நடிப்பை தொடரவே விருப்பம்..! நடிகர் அருண் விஜய் கோவையில் பேட்டி !!!

13

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கிய “மாஃபியா – பாகம் 1” படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் படத்தின் நாயகன் அருண் விஜய் கோவையில் படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை சந்தித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் எண்ணம் குறித்த கேள்விக்கு நல்ல குடும்ப கதை மற்றும் காமெடி கதைகள் அமைந்தால் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும், தமக்கென்று தற்போது உருவாகியுள்ள இந்த ஸ்டைலை தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,மல்ட்டி ஸ்டார் படங்களில் மீண்டும் நடிப்பது குறித்த கேள்விக்கு நல்ல கதையம்சம் இருந்தால் நடிப்பதில் தவறில்லை எனவும்,அதே நேரத்தில் தமக்கென உள்ள பாணியில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதையும் தொடர உள்ளதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon